கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழாவையொட்டி 16ஆம் தேதி சனிக்கிழமை மதுரை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் வெகுவாகக் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மதுரையில் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.
இதனையொட்டி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் 16ஆம் தேதி சனிக்கிழமை மதுரை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். அதேசமயம் கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் வங்கிகள் குறிப்பிட்ட அலுவலர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM