நாளை மிகப்பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம். படத்தின் டிரெய்லரில் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்திய விஷயம் இயக்குநர் செல்வராகவன்தான். மனிதர் கேசுவலாக நடித்துக்கொண்டிருந்தார். திரைக்குப் பின்னால் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த செல்வராகவனை ‘பீஸ்ட்’டும், ‘சாணிக் காயித’மும் திரைக்கு முன்னாலேயே நமக்குக் காட்டவிருக்கின்றன. ‘பீஸ்ட்’ படம் பற்றியும், விஜய் பற்றியும் செல்வாவிடம் பேசியதிலிருந்து…
முதல் படம் இயக்கிய போது ஒருவித பயத்துடன் முதல் ஷோவின் முடிவை எதிர்நோக்கி காத்திருந்து இருப்பீர்கள். இப்போது முதல் முறையாக நடித்திருக்கிறீர்கள். எப்படி இருக்கிறது?
இரண்டும் ஒன்றுதான். இந்த வேலையுடைய தன்மை அப்படி. நாம் நம்மையே பணயம் வைத்துச் செய்யும் வேலை இது.
விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம்…
ஒருவர் ஏன் இந்த அளவு மேலே இருக்கிறார். எப்படி ஒரு சூப்பர்ஸ்டாராக இருக்கிறார் என்பதற்கான காரணத்தை நான் செட்டில் பார்த்தேன். விஜய் அளவுக்கு மிகவும் டெடிகேட்டட்டான (அர்பணிப்பான) ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை. மிகவும் உண்மையாகவே இவற்றை நான் சொல்கிறேன். அங்கயே விழுந்து கிடப்பார்னு சொல்வாங்கல்ல, அப்படித்தான் நான் விஜய்யைப் பார்க்கிறேன். பேசியதைவிட அவரைப் பார்த்து ரசித்ததுதான் அதிகம். இயக்குநர் எத்தனை முறை சொன்னாலும் செய்வார் விஜய். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் அளவுக்கு யாருமே டான்ஸ் ஆட முடியாது. அவர் எளிதாக எல்லோரையும் ஈர்த்துவிடுகிறார். எனக்கு அது ஏனோ இத்தனை ஆண்டுகளாகத் தோன்றவில்லை.
விஜய் படங்களில் மிகவும் பிடித்தது?
காதலுக்கு மரியாதை.
முழுப் பேட்டியையும் கீழேயுள்ள லிங்கில் பார்க்கலாம்.