தனுஷுடனான பிரிவிற்கு பின்னர் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
. தினமும் ஏதாவது ஒரு பதிவு பகிர்ந்து டிரெண்டிங்கில் இடம்பெறும் ஐஸ்வர்யா, நேற்றைய தினம் இசைஞானி இளையராஜாவை சந்தித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். இந்த போட்டோக்கள் இணையத்தில் படு வேகமாக வைரலானது.
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அண்மையில் இவரின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் வெளியானது. இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஐஸ்வர்யா புதிய படம் ஒன்று இயக்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நேரடியாக பாலிவுட்டில் இயக்குனராக தடம் பதிக்கவுள்ளார்.
Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா இப்பெல்லாம் ‘அது’ இல்லாம இருக்குறது இல்லை..!
இந்நிலையில் திடீரென இசைஞானி இளையராஜாவை சந்தித்து, அவர் ஸ்டூடியோவில் இருக்கும் போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. அதோடு, எனது திங்கட்கிழமை பகல் பொழுது
இளையராஜா
அங்கிளின் இசையும், மந்திர சக்தியும் இல்லாமல் இருந்தால் இனிமையாகி இருக்காது கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்தது.
இந்நிலையில் அவரின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள இசைஞானி, உன்னை சந்தித்ததிலும் உன்னுடன் நேரம் செலவிட்டதிலும் மகிழ்ச்சி. ஒருரின் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் மாறும். ஆனால் ஒன்று மற்றும் மாறாது. அது அன்பு. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இரு. எல்லாமே மாறும். ஆனால் ஒன்று மட்டும் மாறாது. அது காதல் என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யாவிற்கு, இசைஞானி மறைமுகமாக அறிவுரை வழங்கியுள்ளதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
அடடே.. இந்த நடிகைக்குள் இப்படி ஒரு திறமையா!