இந்தியாவுடன் பாகிஸ்தான் அமைதியான உறவை விரும்புகிறது என, பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், இம்ரான் கானின் அரசு கவிழ்ந்தது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட ஷெபாஸ் ஷெரீப் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இதை அடுத்து, பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெபாஸ் ஷெரீப்பிற்கு இந்திய பிரதமர்
நரேந்திர மோடி
சமூக வலைதளமான ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு, பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்து உள்ளார்.
பிரதமர் பதவிக்கு ஆபத்து – அபராதம் விதித்த போலீசார்!
இது தொடர்பாக ட்விட்டரில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாது:
வாழ்த்துக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது இன்றியமையாதது.
இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியைப் பாதுகாக்க வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தானின் தியாகங்கள் நன்கு அறியப்பட்டவை. அமைதியைப் பாதுகாப்போம் மற்றும் நமது மக்களின் சமூக – பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.