வரும் 16ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வையொட்டி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட ஊழியர்களுடன் இயங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.