டெஸ்லா ரோடுஸ்டர் கார் புக்கிங் துவங்கியது.. விலை என்ன தெரியுமா..?!

டெஸ்லா கார்களுக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகரித்து வரும் நிலையில் எலான் மஸ்க் புதிதாக அமெரிக்காவில் டெக்சாஸ், ஐரோப்பாவில் ஜெர்மனி தொழிற்சாலையைத் திறந்து மொத்தம் 4 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை வேகப்படுத்தியுள்ளார். இதன் வாயிலாக டெஸ்லா பிரியர்கள் மத்தியில் எப்போது சைபர்டிரக் மற்றும் ரோடுஸ்டர் கார்கள் விற்பனைக்கு வரும் எனக் கேள்வி எழுந்தது.

இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் டெஸ்லா நிறுவனம் 2023ஆம் ஆண்டில் முதல் பிரிவு டெஸ்லா ரோடுஸ்டர் கார்களை விற்பனை செய்வதற்காகப் புக்கிங் சேவையைத் துவங்கியுள்ளது.

அஞ்சலகத்தின் இந்த 3 திட்டங்களில் எப்படி வங்கி கணக்கை இணைப்பது.. ரொம்பவே ஈஸி தான்..!

இந்தப் புதிய ரோடுஸ்டர் கார்கள் உலகிலேயே மிகவும் வேகமாகச் செல்லக்கூடிய காராக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில் இந்தக் காரின் விலை தெரிந்துகொள்ளாவிட்டால் எப்படி..?

டெஸ்லா ரோடுஸ்டர் கார்

டெஸ்லா ரோடுஸ்டர் கார்

இந்தியாவில் இன்னும் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு வராத நிலையில் புதிய ரோடுஸ்டர் கார்களுக்கு வாய்ப்புச் சுத்தமாக இல்லை. இந்நிலையில் டெஸ்லா தனது ரோடுஸ்டர் கார்களை முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் தான் விற்பனை செய்கிறது.

37.9 லட்சம் ரூபாய்

37.9 லட்சம் ரூபாய்

புதிய ரோடுஸ்டர் கார்களைப் புக் செய்ய விரும்புவோர் தங்களது கிரெடிட் கார்டு மூலம் முதலில் 5000 டாலர் கொடுத்து புக் செய்ய வேண்டும், 5000 டாலர் என்பது 3.79 லட்சம் ரூபாய். புக் செய்ய 10 நாளில் இதே கிரெடிட் கார்டில் இருந்து 45000 டாலர் (34.1 லட்சம் ரூபாய்) செலுத்த வேண்டும், இந்தப் பேமெண்ட் முடிந்தால் தான் புக்கிங் உறுதி செய்யப்படும்.

மொத்த விலை
 

மொத்த விலை

ஆனால் இப்புதிய டெஸ்லா புதிய ரோடுஸ்டர் கார் சுமார் 2,00,000 டாலராக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. 2 லட்சம் அமெரிக்க டாலர் என்றால் 1.5 கோடி ரூபாய். ஆனால் புக்கிங் உறுதி செய்யவே 37.9 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்பது தான் முக்கியமான விஷயம்.

 என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

புதிய ரோடுஸ்டர் கார் 200KWH பேட்டரியில் இயங்க கூடியது, அதனால் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 1000 மையில் வரையில் பயணம் செய்யக் கூடிய காராக இருக்கும். இது மட்டும் அல்லாமல் உலகிலேயே அதிவேகமாகச் செல்லக்கூடிய காராகப் புதிய ரோடுஸ்டர் கார் விளங்கும்.

அனைத்தையும் தாண்டி காரின் டிசைன் தான் அனைவரையும் ஈர்த்த முக்கியமான விஷயம்.

ரோடுஸ்டர் கார் வரலாறு

ரோடுஸ்டர் கார் வரலாறு

எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரான டெஸ்லா ரோடுஸ்டர் இறுதியாக 2023 இல் வரக்கூடும் என்பது உறுதியாகியுள்ளது. முதன் முதலில் டெஸ்லா ரோடுஸ்டர் கார்கள் 2008 இல் அறிமுகம் செய்யப்பட்டது. 2008-2012 வரையில் இந்தக் கார் உற்பத்தி செய்யப்பட்டு, அதன் பின் நிறுத்தப்பட்டது.

புதிய மாடல் ரோட்ஸ்டர்

புதிய மாடல் ரோட்ஸ்டர்

அதன் பின் எலான் மஸ்க் புதிய மாடல் ரோட்ஸ்டர் கார் 2017ல் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் 2020 வரையில் வாடிக்கையாளர் கைகளுக்கு வரவில்லை. இந்நிலையில் புதிய மாடல் ரோட்ஸ்டர் கார்களுக்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது, டெஸ்லா வெறியர்கள் மத்தியில் கொண்டாட்டமாக மாறியுள்ளது.

அதிவேக கார்

அதிவேக கார்

இரண்டாம் தலைமுறை டெஸ்லா ரோட்ஸ்டர் உலகின் அதிவேக காராக இருக்க வேண்டும் என்று எலான் மஸ்க் திட்டமிட்டார், அதனால் தான் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. 2020 ஆம் ஆண்டு வரையில் ரோட்ஸ்டர் வெளிவராத நிலையில் 2021 ஆம் ஆண்டின் இறுதியில், டெஸ்லா தனது இணையதளத்தில் இருந்து ரோட்ஸ்டர் மற்றும் சைபர்ட்ரக் விலை மற்றும் முன்பதிவுகளை நீக்கியது பெரும் அதிர்ச்சி அளித்தது.

 ரோட்ஸ்டர், சைபர்ட்ரக்

ரோட்ஸ்டர், சைபர்ட்ரக்

தற்போது புக்கிங் துவங்கப்பட்டு உள்ள காரணத்தால் டெஸ்லா ரோட்ஸ்டர் 2023 இல் வெளிவரலாம். இந்த மாத தொடக்கத்தில் எலோன் மஸ்க் இந்த ஆண்டு உற்பத்தியை அதிகரித்து ரோட்ஸ்டர், சைபர்ட்ரக் மற்றும் செமி ஆகியவற்றை 2023 இல் வெளியிடப்படும் எனக் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tesla Opens booking for new Roadster, Know how much it costs just to confirm reservation

Tesla Opens booking for new Roadster, Know how much it costs just to confirm reservation டெஸ்லா ரோடுஸ்டர் கார் புக்கிங் துவங்கியது.. விலை என்ன தெரியுமா..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.