ரூ.100 மதிப்பீட்டில் பாரம்பரியக் கட்டடங்கள் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்: பொதுப்பணித்துறையின் 5 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: ரூ.100 மதிப்பீட்டில் பாரம்பரியக் கட்டடங்கள் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 190 “சி” வகை அரசு அலுவலர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு , பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 308 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுஅறிவித்தார். அதில் இடம்பெற்ற 5 முக்கிய அறிவிப்புகள்:

> சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 190 “சி” வகை அரசு அலுவலர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு ரூ.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

மறைந்த முதல்வர் கருணாநிதியால், சென்னை தாடண்டர் நகரில் அரசு அலுவலர்களுக்கு 1500 புதிய குடியிருப்புகள் கட்ட வெளியிடப்பட்ட அறிவிப்பில் இதுவரை 900 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 190 “பி” வகை குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது.
2022-23 ஆம் ஆண்டில் 190 “சி” வகை அரசு அலுவலர்களுக்கான ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு ரூ.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

> பொதுப் பணித்துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க 308 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்
பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 308 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்படும்.

> 17 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.100 மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்

  • சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள பழைய சம்பள கணக்கு அலுவலகக் (கிழக்கு) கட்டடம் மற்றும் வேளாண்மை அலுவலக கட்டடத்திற்கு அருகில் உள்ள பதிவு அலுவலக பாரம்பரிய கட்டடம் ரூ.21.18 மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள பிரதான நிர்வாக பாரம்பரிய கட்டடம் ரூ.7.70 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளியின் பாரம்பரியக் கட்டடம் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் முகாமில் உள்ள கலோனியல் மாளிகை ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி மேல்நிலைப் பள்ளியின் பாரம்பரியக் கட்டடம் ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள மங்கள் ராஜே மாடிக் குடியிருப்பு பகுதி ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் ராஜா தெருவில் உள்ள CCMA அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பாரம்பரியக் கட்டடம் (சிவப்பு கட்டடம்) ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
  • சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால் பாதுகாத்தல் ரூ.16 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஜாகீர் பூசிமலை குப்பம் அரண்மனை பாரம்பரிய கட்டடம் ரூ.11.30 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள சம்பாஜ் ராஜா போசலே குடியிருப்பு பாரம்பரியக் கட்டடம் ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள மூத்த இளவரசர் அருங்காட்சியக பகுதி ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கைரேகை பதிவு மற்றும் பொருளாதார அலுவலக பிரிவு அலுவலகம் இயங்கி வரும் பாரம்பரிய கட்டடம் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • கடலூர் மாவட்டம், கடலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய மாவட்ட நீதிமன்ற பாரம்பரியக் கட்டடம் ரூ.3.19 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • தேனி மாவட்டம் பெரியகுளம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய மாவட்ட முன்சீப் நீதிமன்றக் கட்டடம் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி பழைய ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்ற பாரம்பரியக் கட்டடம் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • திருச்சிராப்பள்ளியில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற பாரம்பரியக் கட்டடம் ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
  • ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள பழைய சார்பு நீதிமன்ற பாரம்பரியக் கட்டடம் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.

> திறன் மேம்பாடு மற்றும் தரக்கட்டுப்பாட்டிற்காக பொறியியல் மற்றும் ஆய்வக உபகரணங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்து வழங்கப்படும்

அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் தேவைப்படும் பொறியியல் உபகரணங்கள் (Scientific Instruments) மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வக உபகரணங்கள் ஒரு மண்டலத்திற்கு தலா ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் ரூ.10 கோடி செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

> திருவண்ணாமலை மற்றும் வேலூரில் புதிய கூடுதல் சுற்றுலா மாளிகைகள், வாணியம்பாடியில் ஒரு ஆய்வு மாளிகை மொத்தம் ரூ.17.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

  • சென்னை மண்டலம்ம திருவண்ணாமலையில் கூடுதல் சுற்றுலா மாளிகை ரூ.8.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • சென்னை மண்டலம், வேலூரில் கூடுதல் சுற்றுலா மாளிகை ரூ.6.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • சென்னை மண்டலம், வாணியம்பாடியில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.