பிலிப்பைன்ஸ் நாட்டின் லெய்டே மாகாணத்தில், ஏராளமான வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் மண்சரிவால் புதைந்துள்ள டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஞாயிற்றுகிழமை பிலிப்பைன்ஸைத் தாக்கிய மெகி புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டன. லெய்டே மாகாணத்தில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கபிஸ் மாகாணத்தில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை எடுத்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். அருகே உள்ள டாவோ மாகாணத்தில் மெகி புயலால் 3 பேர் உயிரிழந்தனர்.