கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தற்போது கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறியிருப்பது அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கல் தொடங்கியதில் இருந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி இடம் ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் அதிக படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக இது செயல்பட்டு வந்தது. இங்கு 65 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை பெற்ற அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் முதன்முறையாக கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது. இது அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களைகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.