விஜய்
மற்றும்
நெல்சன்
இணைந்த
பீஸ்ட்
திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. விஜய்யுடன்
பூஜா ஹெக்டே
நாயகியாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர்
செல்வராகவன்
நடித்துள்ளார். அனிருத்தின் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளது பீஸ்ட் திரைப்படம்.
படத்தில் விஜய் உளவாளியாக நடித்துள்ளார் என்பது ட்ரைலரை பார்க்கும்போதே ரசிகர்கள் கணித்தனர். மேலும் ட்ரைலரில் மொத்த கதையையும் நெல்சன் கூறியுள்ளது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
என்னோட கேரக்டர் இதுதான்..விஜய் ஓபன் டாக்..!
இந்நிலையில் பொதுவாக விஜய்யின் படங்கள் வெளியாகும் முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும். அதில் விஜய்யின் பேச்சையும், குட்டி கதையையும் கேட்பதற்கென்ற தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.
பீஸ்ட்
ஆனால் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. மேலும் இசை வெளியீட்டு விழா ரத்துக்கான காரணமும் படக்குழு தெரிவிக்காததால் ஆளாளுக்கு ஒரு காரணத்தை கூறிவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. அதில் இயக்குனர் நெல்சன் படத்தைப்பற்றி பேசினார். அப்போது அவரிடம் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கான காரணம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. மேலும் அரசியல் காரணமாகத்தான் பீஸ்ட் இசை வெளியீட்டு விழா ரத்தானதா என்ற கேள்வியும் நெல்சனிடம் கேட்கப்பட்டது.
பீஸ்ட்
அதற்கு நெல்சன், எனக்கு அரசியல்லாம் ஒன்றும் தெரியாது. முதலில் நான் பேசவேண்டியதை பேசிக்கொள்கிறேன். இல்லையென்றால் நான் பேச நினைப்பதை மறந்துவிடுவேன் என கலகலப்பாக கூறினார். இதனையடுத்து அவர் பேசியதும் பிரஸ் மீட் முடிவுக்கு வந்தது. கடைசிவரை இசை வெளியீட்டு விழா ஏன் ரத்தானது என்று சொல்லாமல் நெல்சன் சென்றது குறிப்பிடத்தக்கது.
தளபதிகளின் சந்திப்பில் இத கவனிச்சீங்களா?