பீஸ்ட் படத்துல அந்த சீன் வேற லெவல்..நெல்சனின் தரமான செய்கை..!

விஜய்யின்
பீஸ்ட்
திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
நெல்சன்
இயக்கத்தில்
பூஜா ஹெக்டே
நாயகியாக நடிக்க
செல்வராகவன்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத்தின் இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற சமீபத்தில் வெளியான ட்ரைலரும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து பீஸ்ட் படத்தின் முன்பதிவு சில தினங்களுக்கு முன்பு துவங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. எனவே பீஸ்ட் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பலகோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

விஜய்க்காக அஜித் ரசிகர்கள் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்..!

இந்நிலையில் இன்று அதிகாலை பீஸ்ட் படத்தைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாசிட்டிவான விமர்சனங்களையே வழங்கி வருகின்றனர்.
விஜய்
ரசிகர்களை தவிர பொதுவான ரசிகர்களும் படத்தைப்பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கிவருகின்றனர்.

பீஸ்ட்

இதைத்தொடர்ந்து பீஸ்ட் படத்தில் விஜய் வெறித்தனமாக இருப்பதாகவும் படு ஸ்டைலாக மாஸாக படம் முழுவதும் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடமபெற்ற ஒரு காட்சியை ரசிகர்கள் ஹைலைட்டாக பேசிவருகின்றனர்.

அதாவது பீஸ்ட் படத்தில் ஒரு காட்சியில் விஜய் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என
போக்கிரி
வசனத்தை பேசுவார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் திரையரங்கில் ஆர்ப்பரித்தனர்.

பீஸ்ட்

பீஸ்ட் படத்தில் இடமபெற்ற இந்த போக்கிரி வசனம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும் ஐ எம் வைட்டிங்க் வசனத்திற்கு கிடைத்த வரவேற்பை போல பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற போக்கிரி வசனத்திற்கு கிடைத்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

மேடையில் பூஜா ஹெக்டே போட்ட அரபிக்குத்து; குஷியான ரசிகர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.