சென்னை புறநகர் ரயிலின் மீது கற்களை வீசி தாக்கியும், அரிவாளுடன் ரயிலில் ஏறிய இளைஞர்கள் சிலர் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் ரயில், அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கே இருந்த இளைஞர்கள் சிலர் ரயில் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியதாகவும், தொடர்ந்து ரயிலில் ஏறி கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு பயணிகள் சிலரை தாக்கிவிட்டு நந்தியம்பாக்கம் நிலையத்தில் இறங்கி தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சக பயணிகளுக்கு இடையூறு செய்ததால், பயணிகள் சிலர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.