என் தலைவன் வந்துட்டாருடா..!பீஸ்ட் FDFSல் கூல் சுரேஷ் செய்த தரமான சம்பவம்..!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் கூல் சுரேஷ். பல படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் தன் நகைச்சுவை திறனால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார் கூல் சுரேஷ். நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான கூல் சுரேஷ் அவரின் தீவிர ரசிகரும் கூட.

கடந்தாண்டு சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியானபோது கூல் சுரேஷ் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வீடியோ சமூகத்தளங்களில் ட்ரெண்டானது. அதுவரை படங்களின் மூலமே பிரபலமான கூல் சுரேஷ் மாநாடு படத்தின் FDFS காட்சிக்கு வந்து உணர்ச்சிவசப்பட்டு பேசி ரசிகர்களின் மொத்த கவனத்தையும் ஈர்த்தார்.

பீஸ்ட் படத்துல விஜய்க்கு அடுத்து அவர்தான் பெஸ்ட்.. ரசிகர்கள் கருத்து..!

அதைத்தொடர்ந்து அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் FDFS காட்சிக்கும் வந்து தனக்கான பாணியில் பேசி அசத்தினார். இந்நிலையில் இன்று விஜய்யின்
பீஸ்ட்
படத்தின் FDFS காட்சிக்கும் வந்துள்ளார் கூல் சுரேஷ்.

பீஸ்ட்

விஜய்
மற்றும்
நெல்சன்
கூட்டணியில் உருவான பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அனைவரும் விஜய்யின் பீஸ்ட் படத்தை கொண்டாடி வரும் சூழலில் ரசிகர்களுடன் ரசிகர்களாக பல திரைபிரபலங்களும் பீஸ்ட் படத்தை பார்த்துள்ளனர்.

நடிகர் கூல் சுரேஷும் பீஸ்ட் படத்தின் FDFS காட்சியை காண திரையரங்கிற்கு சென்றுள்ளார். அப்போது கூல் சுரேஷ் வெந்து தணிந்தது காடு பெட்ரோல் விலையை குறைத்து போடு என்ற வாசகத்தின் கூடிய பலகையை வைத்து கோஷம் போட்டார்.’

கூல் சுரேஷ்

அவருடன் சேர்ந்து ரசிகர்களும் முழக்கமிட்டனர். நாட்டில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துவரும் நிலையில் கூல் சுரேஷ் பெட்ரோல் விலையை எதிர்த்து கோஷம் போட்டதை ரசிகர்கள் பலரும் பாராட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

Beast Review கொடுத்த சந்திரசேகர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.