வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,870 ஆக குறைந்தது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,088 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,38,016 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,081 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,05,410 ஆனது. தற்போது 10,870 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கோவிட் காரணமாக 26 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,21,736 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 186.07 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 15,05,332 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு பிறகு
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக கோவிட் தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நிலையில், காரைக்காலில் கோவிட் தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் உறுதியான 3 பேரும் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement