ஐபிஎல் போட்டியில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்த தோனி சாதுர்யமாக பீல்டிங் செட்டப் செய்ததற்கு கைமேல் பலன் கிடைத்த வீடியோ வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற 22வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஐபிஎல் சீசனில் தொடர் தோல்வியை சந்தித்து வந்த சென்னை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இதில் பெங்களூர் அணி நட்சத்திர வீரர் விராட் கோலி வெறும் 1 ரன்னுக்கு அவுட்டானார்.
— Addicric (@addicric) April 12, 2022
அவர் முகேஷ் சவுத்ரி பந்துவீச்சில் ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார்.
இந்த நிலையில் கோலி அவுட்டாவதற்கு முன்னர் மகேந்திர சிங் தோனி தான் பீல்டிங்கை மாற்றி அமைத்தார்.
அதற்கேற்றார் போல சவுத்ரி பந்துவீசிய நிலையில் கோலி துபேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.