டுங்க்வான் (சீனா): மடிக்கக்கூடிய வகையிலான ஃபோல்டபிள் போனான ‘விவோ X ஃபோல்ட்’ போனை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். இது அந்நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் போனாகும்.
சீன தேசத்து ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ டிஜிட்டல் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய மாடல் போன்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மடிக்கக்கூடிய வகையிலான ஃபோல்டபிள் போனை அறிமுகம் செய்துள்ளது விவோ. இப்போதைக்கு இது சீன தேசத்து சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
படிப்படியாக வரும் நாட்களில் இந்த போன் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது. இதன் டிசைன் கிட்டத்தட்ட சாம்சங் நிறுவனத்தின் ‘Z’ மற்றும் ஒப்போ நிறுவனத்தின் ‘Find X’ ஃபோல்டபிள் சீரிஸ் போன்களை போலவே இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
6.53 இன்ச் வெளிப்புற டிஸ்பிளே, 8.03 இன்ச் பிரைமரி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 சிப்செட், 12ஜிபி ரேம், 4600mAh பேட்டரி, வொயர் மற்றும் வொயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட், ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட், பின்பக்கத்தில் நான்கு கேமராவும் உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் இடம்பெற்றுள்ளது. மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை இந்திய மதிப்பில் 1,19,401 ரூபாய் என தெரிகிறது.
vivo X Fold hands-on images leaked. pic.twitter.com/20F5nWGvAI
— Mukul Sharma (@stufflistings) April 9, 2022