இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்கப் பயணத்தின் ஒருபகுதியாக பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹவாய்த் தீவுக்குச் சென்றுள்ளார்.
வாஷிங்டனில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டினுடன் இருநாட்டுப் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ராஜ்நாத் சிங் பேச்சு நடத்தினார்.
இதையடுத்துப் பசிபிக் பெருங்கடலில் ஹவாய்த் தீவில் உள்ள ஹோனோலுலு விமான நிலையத்துக்கு விமானப்படை விமானத்தில் ராஜ்நாத் சிங் சென்றடைந்தார். அவரை இந்தோ பசிபிக் படைத்தொகுதியின் கமாண்டர் ஜான் அகுலினோ வரவேற்றார்.
ஹவாயில் அமெரிக்க ராணுவத் தளம், விமானத் தளம், கடற்படைத் தளம் ஆகியவற்றைப் பார்வையிட உள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.