தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை மானிய கோரிக்கையின் போது, பால்வளத் துறை அமைச்சர் நாசர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,
தரம் என்றால் அது ஆவின் தான்; இனி ரேசன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், சேலம் கருமந்துறையில் 6 கோடி ரூபாயில் உயர் மரபியல் திறனுள்ள கிடேரி கன்றுகள் வழங்கும் திட்டம்.
தமிழ் மொழிக் கல்வியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பால் உற்பத்தியாளர் வாரிசுகளுக்கு பரிசு வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா மூன்று சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னையில் ஆவின் பால் விற்பனை நாளொன்று 1 லட்சம் லிட்டர் அதிகரித்திருப்பதாக பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பொருட்களை மொரீசியஸ், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.