பாகிஸ்தான் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (எஃப்ஐஏ) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் ‘பரிசாக பெற்ற நெக்லஸ்’-ஐ விற்றதற்காக முதல் விசாரணையைத் தொடங்கியது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
24 நியூஸ் எச்டி டிவி சேனலின் படி, பாகிஸ்தானின் உயர்மட்ட விசாரணை நிறுவனம், ‘தோஷகானா’ (பாகிஸ்தான் நாட்டின் பரிசுக் களஞ்சியம்) க்கு சொந்தமான பரிசு நெக்லஸை விற்பனை செய்தது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அந்த நகையை லாகூரில் உள்ள நகை வியாபாரிக்கு ரூ. 180 மில்லியனுக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரான சுல்பி புகாரி மூலம் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, பொது பரிசுகள் அதன் பாதி விலையில் தனிப்பட்ட பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படலாம். ஆனால் இம்ரான் கான் சில லட்சங்களை டெபாசிட் செய்தார், அது சட்டவிரோதமானது.
மேலும் படிக்க | உக்ரைன் சமாதானப் பேச்சுக்கள் முட்டுச்சந்தை எட்டியுள்ளது: விளாடிமிர் புடின்
நெக்லஸ் விற்றதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று வெளிநாட்டு பாகிஸ்தானியர்களில் பிரதமரின் முன்னாள் சிறப்பு உதவியாளர் சையத் சுல்பிகார் புகாரி செவ்வாய்கிழமை மறுத்துள்ளார். ஜியோ நியூஸிடம் பேசிய சுல்பி புகாரி, நெக்லஸ் குறித்த பேச்சு எப்போதும் இருக்கவில்லை என்றும், குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை என்றும் கூறினார்.
முன்னதாக, பாகிஸ்தான் தேசிய கருவூலத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காகவும், தோஷகானாவிலிருந்து விலைமதிப்பற்ற நெக்லஸை விற்றதாகவும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு முகமை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகின.
அந்த நகையை லாகூரில் உள்ள நகைக்கடை வியாபாரி ஒருவருக்கு ஜூல்பி புகாரி மூலம் 180 மில்லியன் ரூபாய்க்கு விற்றதாகவும், அதில் ஒரு பகுதியே தோஷகானாவுக்கு செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR