தன்னார்வ, மதம் சார்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியான சட்டம்- உச்சநீதிமன்றம் மறுப்பு

நாடு முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மதம் சார்ந்த தொண்டு அமைப்புகள் ஆகியவற்றிற்கு தொடர்பாக ஒரே மாதிரியான சட்டத்தை உருவாக்க கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்தியாயா, வக்பு வாரியங்கள் மற்றும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துகளை நிர்வகிப்பதற்கு என்று தனி சட்டமும், பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மதம்சார்ந்த அமைப்புகளை நிர்வகிப்பதற்கு என்று தனித்தனியாக சட்டங்கள் இருப்பதாகவும், இவற்றை மாற்றி ஒரே மாதிரியான பொது சட்டத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
image
அதேபோல் வக்பு வாரியங்கள் செயல்படுவதை அனுமதிக்கும் சட்டப்பிரிவுகளை நீக்கக் கோரியும், அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, எந்த ஒரு நீதிமன்றமும் குறிப்பிட்ட சட்டத்தை உருவாக்குங்கள் என நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், தாங்கள் இதில் தலையிட விரும்பவில்லை என்றும், மனுதாரருக்கு தேவைப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளிடம் இது சம்பந்தமாக முறையிடலாம் எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.