தயவுசெய்து முழு சம்பளத்தினையும் கொடுங்க.. ஏர் இந்தியா பைலட்கள் கதறல்..!

இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமாக இருந்து வரும் டாடா குழுமம், சமீபத்தில் தான் பெருத்த கடன் பிரச்சனையில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தினை கையகப்படுத்தியது. இதனையடுத்து டாடா குழுமம் ஏர் இந்தியாவில் ஒவ்வொரு மாற்றமாக சீரமைக்க தொடங்கியுள்ளது.

இந்த இணைப்புக்கு மத்தியில் ஏர் இந்தியாவில் பணியாற்றிய ஊழியர்கள் பலருக்கும் சம்பளம் மருத்துவ வசதி உள்பட பல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில் சமீபத்தில் ஏர் இந்தியாவின் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது நினைவுகூறத்தக்கது.

இந்த நிலையில் தான் ஏர் இந்தியாவில் பைலட் அசோசியேஷனின் புதிய தலைவரான என் சந்திரசேகரனுக்கு, பைலட்களின் சம்பளத்தினை மீட்க கடிதம் எழுதியுள்ளது.

கொரோனாவால் தவிக்கும் சீனா.. ஐபோன் உற்பத்தியாளர் எடுத்த அதிரடி முடிவு..!

கொரோனாவால் சம்பளம் குறைப்பு

கொரோனாவால் சம்பளம் குறைப்பு

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் விமான துறையும் ஒன்று. அந்த சமயத்தில் அரசு பைலட்களின் சம்பளத்தினை 55 சதவீதம் குறைத்ததாக இந்திய வணிக விமானிகள் சங்கம் (ICPA) தெரிவித்துள்ளது. அதேபோல அலவன்ஸ்களும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

பழைய சம்பளத்தினை கொடுங்க

பழைய சம்பளத்தினை கொடுங்க

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், விமான சேவையும் பழையபடி தொடங்கியுள்ளது. இதற்கிடையில் விமானிகளுக்கு சம்பளத்தினை பழையபடி கொடுக்க வேண்டும் என்றும் கூறியது. மேலும் சம்பள குறைப்பினை தொடர எந்த காரணமும் இல்லை. ஆக விரைவில் சம்பளத்தினை மீட்டெடுக்க வேண்டும் என்றும் இச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இணை விமானிகளுக்கும் சம்பள மாற்றம் செய்யணும்
 

இணை விமானிகளுக்கும் சம்பள மாற்றம் செய்யணும்

மேலும் நிறுத்தப்பட்ட அனைத்து அலவன்ஸ்களையும் மீண்டும் கொடுக்க வேண்டும். தற்போது தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆக டாடா நிறுவனம் விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்துள்ளது.

மேலும் இணை விமானிகளுக்கும் சம்பளத்தினை மாற்றியமைக்குமாறு டாடா சன்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளது இந்த சங்கம்.

மன உறுதி சரிவு

மன உறுதி சரிவு

சம்பள குறைப்பானது விமானிகளின் மன உறுதியினை குலைத்துள்ளது. மேலும் அனுபவம் வாய்ந்த விமானிகளை இழப்பது நிறுவனத்திற்கு தான் நஷ்டம். ஆக இந்த விவகாரத்தில் சந்திரசேகரன் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது. மேலும் சாத்தியமான மாற்று வழிகள் குறித்த விவாதங்களுக்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சந்திரசேகரன் தலைவர்

சந்திரசேகரன் தலைவர்

ஏர் இந்தியாவின் புதிய தலைவராக கடந்த மார்ச் 14 அன்று என் சந்திகரசேகரன் நியமிக்கபட்டார்.
பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த ஏர் இந்தியா நிறுவனம் 69 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா குழுமமே கைபற்றிய நிலையில், விரைவில் உலகத்தரம் வாய்ந்த விமான சேவையை வழங்குவோம் என டாடா குழுமம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Air India pilots write to N chandrasekaran to restore full pay and allowances

Air India pilots write to N chandrasekaran to restore full pay and allowances/தயவுசெய்து முழு சம்பளத்தினையும் கொடுங்க.. ஏர் இந்தியா பைலட்கள் கதறல்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.