கேரளாவில் கேஸ் அடுப்பு பழுது பார்க்கும் கடையில் அடுத்தடுத்து 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து.!

கேரள மாநிலம் திருச்சூரில், கேஸ் அடுப்பு பழுது பார்க்கும் கடையில் அடுத்தடுத்து 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

கொட்டாரக்கரையில் உள்ள கேஸ் அடுப்பு பழுது பார்க்கும் கடையில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலின்டர் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக கடையில் இருந்து வெளியேறினர். தீ வேகமாகப் பரவியதில் அடுத்தடுத்து 3 சிலிண்டர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின.

அருகில் இருக்கும் கடைகளுக்கும் தீ பரவியதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.