டெல்லி: மதுரை டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தல் முடிவு விவகாரம் தொடர்பான திமுக வேட்பாளரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திமுக வேட்பாளர் சுப்புலட்சுமியின் வெற்றியை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.