ராணுவ பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவில் இணைவது தொடர்பான சாதகமான முன்னெடுப்புகளை பின்லாந்து மற்றும் ஸ்வீடன் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா தனது ராணுவ தாக்குதலை முன்னெடுத்ததை தொடர்ந்து, ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவது தொடர்பான நடவடிக்கைகளை பின்லாந்து மற்றும் ஸ்வீடன் மேற்கொண்டுவருகிறது.
அதுகுறித்த விவாதங்கள் பின்லாந்தின் 200 பிரதிநிதிகளை கொண்ட எடுஸ்குண்டா நாடாளுமன்றத்தில் ஒருமாதத்திற்கும் மேலாக நடைபெற்று இறுதி முடிவுகள் இன்னும் சில வாரங்களில் அல்லது மே மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என போலந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Paul Wennerholm/TT
அதைப்போல ஸ்வீடன் அரசாங்கமும் பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்த நடைமுறைகளை 346 பிரிதிநதிகள் கொண்ட ரிக்ஸ்டாக் நாடாளுமன்றத்தில் விவாதித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ஸ்வீடன் பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன் மற்றும் பின்லாந்து பிரதமர் சன்னா மரின் இருவரும் இணைந்து ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் புதன்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பின்லாந்து பிரதமர் சன்னா மரின், சில வாரங்களுக்குள் நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பான முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
Paul Wennerholm/TT
மேலும் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இரண்டு நோர்டிக் நாடுகளும் அரசியல் பொருளாதார மற்றும் ராணுவ உறவில் சிறப்பாக இணைந்து இருப்பதால் ராணுவ மற்றும் பாதுகாப்பு முடிவுகளான நேட்டோ படையில் இணைவது உட்பட எந்தவொரு முடிவையும் சுயமாக எடுக்க முடியும் என தெரிவித்தார்.
அதேசமயம் இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் எங்களை பாதிப்பதுடன் மட்டுமில்லாமல் எங்களது அண்டை நாடுகளையும் பாதிக்கும் என்பதால் அதன் நன்மை தீமைகளை தீவிரமாக ஆலோசனை நடத்திவருவதாக தெரிவித்தார். ஆனால் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இரண்டு நாடுகளும் நேட்டோ இணைய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
Paul Wennerholm/TT
இதையடுத்து பேசிய ஸ்வீடன் பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன், பின்லாந்துடன் பேச்சுவார்த்தைகள் நெருக்கமாகவும் வெளிப்படையாகவும் மற்றும் நேர்மையாகவும்
இருக்கிறது, என தெரிவித்ததுடன் வரும் வாரத்திற்குள் நேட்டோவில் இணைவது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பின்லாந்து மற்றும் ஸ்வீடன் இந்த அறிவிப்புகளுக்கு ரஷ்யா பகிரங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த முடிவு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கும் என தெரிவித்துள்ளது.
நீட்டிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்: அமெரிக்க அரசு தீவிர ஆலோசனை!