ஷிவமொகா : ஷிவமொகாவில், திருவிழா முடிந்து சரக்கு வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது, அந்த வாகனம் மரத்தில் மோதியதில் மூவர் உயிரிழந்தனர்; 11 பேர் படுகாயமடைந்தனர்.ஷிவமொகா மாவட்டம், சொரபா தாலுகா, தவநந்தி கிராமத்தை சேர்ந்த 14 பேர், ‘டாடா ஏஸ்’ சரக்கு வாகனத்தில் சாகர் தாலுகாவின் குத்தனஹள்ளி கிராமத்தில் நடந்த துர்காம்பா திருவிழாவுக்கு நேற்று முன்தினம் மாலை சென்றனர்.திருவிழாவை பார்த்து விட்டு, நள்ளிரவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அதிகாலையில் துாக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநர், சித்ரட்டஹள்ளி அருகே வேகமாக சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் மரத்தில் வாகனத்தை மோதினார்.இதில், ஆகாஷ், 13, திம்மப்பா ஈரப்பா, 45, யோகராஜப்பா, 57, ஆகிய மூவர் உடல் நசுங்கி இறந்தனர்.பசவராஜ், 33 உட்பட ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.இவர்கள் ஷிவமொகாவின் மெக்கான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். வாகன ஓட்டுநர் ஹனுமந்தப்பா, 48, நிரஞ்சன், 23, ஆகியோர் சொரபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஷிவமொகா : ஷிவமொகாவில், திருவிழா முடிந்து சரக்கு வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது, அந்த வாகனம் மரத்தில் மோதியதில் மூவர் உயிரிழந்தனர்; 11 பேர் படுகாயமடைந்தனர்.ஷிவமொகா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.