ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சிர் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடைபெறுவதால் அதிகமானோர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர் இதனால் கடந்த இரண்டு மூன்று தினங்களாக தேர்வு வாரிய இணையதளம் சரிவர இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஆனால் கடந்த மூன்று நாட்களாக தேர்வு வாரியத்தின் இணையதளம் சரிவர இயங்காமல் உள்ளது. எனவே விண்ணப்பிக்கும் தேதியை மேலும் ஒரு வார கால நீட்டிப்பு செய்திட இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.