பாகல்கோட் : ”கிராமப்புறத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நான்கைந்து பள்ளிகள் இணைக்கப்படும்,” என்று கல்வி துறை அமைச்சர் நாகேஷ் கூறினார்.பாகல்கோட்டில் நேற்று கல்வித்துறை வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற துவக்க மற்றும் உயர் கல்வித்துறை அமைமச்சர் நாகேஷ் கூட்டம் முடிந்த பின் கூறியதாவது:
ஒரே ஒரு கிராமத்தை கொண்டுள்ள கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பள்ளிகளுடன் அக்கம் பக்கத்தில் உள்ள நான்கைந்து பள்ளிகளை ஒன்றாக இணைக்க ஆலோசிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் அறிவித்தது போல, ஒவ்வொரு பேரூராட்சிக்கும் ஒரு மாதிரி பள்ளி ஆரம்பிக்கும் நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.இதற்காக எந்த பள்ளிகளை தேர்ந்தெடுப்பது என்ற பட்டியலை அளிக்க, கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பேரூராட்சிக்கு ஒரு மாதிரி பள்ளி என்பது தேவை ஏற்பட்டால் கூடுதலாகவும் சேர்த்து கொள்ளப்படும்.
பி.யு., தேர்வுகள் விரைவில் துவங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் சில இடங்களில் குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதே போன்ற குறைபாடுகள் ஏற்படாத வண்ணம் பி.யு., தேர்வில் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அனைத்து மாவட்டம், தாலுகா அளவிலான கல்வி அதிகாரிகள், இனி, மாதத்தில் 12 நாட்கள் கட்டாயம் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆண்டுக்கு ஒரு முறை பள்ளி வகுப்பறைகள் சீரமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement