Tamil Politicians Leaders Tamil New Year Wishes : ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் பாரம்பரியத்தின் முக்கிய பண்டிகைளில் ஒன்றான இந்நாளில், கோவில்களில் சிறப்பு வழிபாடு, புத்தாடை அணிவது உள்ளிட்ட என தமிழகர்கள் தங்களது மகிழ்ச்சி ஆராவாரத்தை வெளிப்படுத்துவது வழக்கம்.
பொங்கல் பண்டியை போன்று விமர்சையாக கொண்டாடப்படும் இந்த தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உலகம் போற்றும் வகையில் சிறப்பித்து வருகின்றனர். இந்த நன்னாளில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்தக்கள் தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் நாளை தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஒபிஎஸ் – இபிஎஸ்
உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#April14 #AIADMK pic.twitter.com/K41Y5LeIHp
— அஇஅதிமுக (@ADMKofficial) April 13, 2022
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற எங்கள் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், மீண்டும் ஒருமுறை எங்களது நெஞ்சார்ந்த “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்.” என கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
உலகிலேயே தொன்மையான இலக்கிய, இலக்கண வளங்கள் நிறைந்த தமிழைப் பேசும் தமிழ் மக்களுக்கு கனிவான தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/22O3QjvORg
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 13, 2022
உலகிலேயே தொன்மையான இலக்கிய, இலக்கண வளங்கள் நிறைந்த தமிழைப் பேசும் தமிழ் மக்களுக்கு கனிவான தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி நிறையட்டும் என பிராத்திக்கிறேன். “சுபகிருது” புத்தாண்டு, எல்லா சுபங்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் என வாழ்த்துகிறேன்.” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
“சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஒளி மயமான எதிர்காலம் தமிழ் குலத்துக்குக் கட்டியம் கூறும் இவ்வேளையில், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும், தாய்த் தமிழகத்தில் மது அரக்கனின் கொடுமை நீங்கவும், தமிழக மீனவர்களின் அல்லல்களை அகற்றவும், விவசாயிகளின் துயர் துடைக்கவும் இச்சித்திரைத் தலைநாளில் சூளுரை மேற்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
“தமிழர்கள் வாழ்வில் வெற்றிகளை நிறைக்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் அனைத்து மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறைய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க இச்சித்திரைத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.” என்று கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
“மாம்பழப் பருவத்தின் வருகையை உணர்த்தும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்கள் இனி தொட்டதெல்லாம் துலங்க வேண்டும்; அவர்களின் வாழ்வில் அமைதி, மனநிறைவு, வளம், வெற்றி, மகிழ்ச்சி ஆகியவை பொங்குவதற்கு வாழ்த்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.
“ “