விளாடிமிர் புடினின் கொடுஞ்செயல்… அம்பலப்படுத்திய ரஷ்யருக்கு ஏற்பட்ட துயரம்


உக்ரைன் படையெடுப்பின் கொடூரங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தியதற்காக ரஷ்ய கலைஞர் ஒருவர் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

ரஷ்யாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில், 31 வயதான Alexandra Skochilenko என்ற கலைஞர் உக்ரைனில் மரியுபோல் நகரில் ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனம் தொடர்பில் குறிப்பு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

விலைப்பட்டியலில் தொடர்புடைய கருத்தை அவர் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கத்திய நாடுகள் அனைத்தும் விளாடிமிர் புடினின் போர் குற்ற நடவடிக்கைகளின் ஒருதுளி இதுவென கூறிவரும் நிலையில், உக்ரேனிய தீவிர வலதுசாரி போராளிகள் மீது முன்னெடுக்கப்பட்ட இராணுவ சிறப்பு நடவடிக்கை இதுவென ரஷ்ய நிர்வாகம் உள்ளூர் மக்களிடம் கூறி வருகிறது.

இந்த நிலையிலேயே, ரஷ்ய கலைஞரான Alexandra Skochilenko, பல்பொருள் அங்காடியில் பொருட்களின் விலைப்பட்டியலில், மரியுபோல் நகரில் ரஷ்ய தாக்குதலுக்கு பயந்து பதுங்கியிருந்த 400 அப்பாவி மக்கள் மீது வான் தாக்குதலை முன்னெடுத்ததை பதிவு செய்திருந்தார்.

ஆனால், Alexandra Skochilenko பொய்யான தகவல்களை பரப்புவதாக ரஷ்ய நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், ரஷ்ய இராணுவத்தை அவர் குறை மதிப்பிட்டு அவமானப்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாவட்ட நீதிமன்றம் அவரை ஏழு வாரங்களுக்கு முன் விசாரணைக் காவலில் வைத்து உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் Alexandra Skochilenko பதிவிட்டுள்ளதாக நீதிபதி தமது விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, இத்தகைய செயல்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கி மேலும் நாசகார நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Alexandra Skochilenko மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ஆனால், தாம் பொய்யான தகவல்களை பரப்பவில்லை எனவும், உக்ரைன் மக்கள் படும் அவஸ்தைகளை மட்டுமே தாம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உக்ரைன் தொடர்பில் ஆதரவாக கருத்து தெரிவித்த 23 பேர்கள் இதுவரை ரஷ்ய நிர்வாகத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.