ரஷ்யாவில் இருந்து வெளியேறும் முதல் இந்திய நிறுவனம்.. இன்ஃபோசிஸ் எடுத்த அதிரடி முடிவு..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் தனது ரஷ்ய அலுவலகத்தினை மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இது ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்யாவுக்கு தனது கண்டனத்தினை தெரிவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

சர்வதேச அளவிலான டெக் ஜாம்பவான்கள் கூட, ரஷ்யாவில் இருந்து தங்களது வணிகத்தினை நிறுத்தி வரும் நிலையில், இன்ஃபோசிஸ்-ன் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

17 வருடத்திற்கு பின் இந்தியாவை விட்டு வெளியேறும் ஹோல்சிம்.. அம்புஜா, ஏசிசி சிமெண்ட் விற்பனை..!

இது உண்மை தான்

இது உண்மை தான்

எனினும் இது உண்மையா? நிறுவனம் இது குறித்து எந்த தெளிவான அறிவிப்பும் கொடுக்கவில்லையே என்ற சந்தேகமும் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சலீல் பரேக், ரஷ்ய நிறுவனங்களுடன் முன்னோக்கி செல்லும் எந்த திட்டமும் இல்லை. நிறுவனம் தனது சேவைகளை ரஷ்யாவுக்கு வெளியே தனது சேவைகளை மாற்றும் பணியில் ஈடுபடுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பணியாற்ற விருப்பம் இல்லை

பணியாற்ற விருப்பம் இல்லை

இன்ஃபோசிஸ் ரஷ்யா அலுவலகத்தில் 100 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ள சலீல், நாங்கள் எந்த ரஷ்ய நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை. ரஷ்யாவில் தற்போது இருக்கும் சில பணிகள் உலகளாவிய வாடிக்கையாளர்களுடன் தொடர்புடையது என்றும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்கவில்லை
 

கருத்து தெரிவிக்கவில்லை

இது குறித்த கருத்தினை சலீல் பரேக், நிறுவனத்தின் 4வது காலாண்டு அறிக்கை குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். எனினும் இன்ஃபோசிஸ் இண நிறுவனர் நாரயண மூர்த்தி, அவரின் மகள் அக்‌ஷதா மூர்த்தியின் அழுத்தம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

மனிதாபிமான உதவி

மனிதாபிமான உதவி

அக்‌ஷதா மூர்த்தியின் கணவர் ரிஷி சுனக் எதிர்கொண்ட அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை இருக்கலாமோ? என்ற கேள்விக்கு மத்தியில் இன்ஃபோசிஸின் இந்த அதிரடி நடவடிக்கையானது வந்துள்ளது. இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு மத்தியில், உக்ரைனுக்கு 1 மில்லியன் டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் ரஷ்யாவில் இருந்து வெளியேறும் முதல் இந்திய நிறுவனமாகும்.

பங்கு நிலவரம்

பங்கு நிலவரம்

இன்று பங்கு சந்தை விடுமுறை என்பதால் இதன் தாக்கம் சந்தையில் இல்லை. எனினும் அடுத்த சந்தை அமர்வில் இதன் எதிரொலி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த அமர்வில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இயில் 1748.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது, இதே பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 1748.65 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1953.70 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1230 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Infosys has no plans to continue business with any Russian company

Infosys has no plans to continue business with any Russian company/ரஷ்யாவில் இருந்து வெளியேறும் முதல் இந்திய நிறுவனம்.. இன்ஃபோசிஸ் எடுத்த அதிரடி முடிவு..!

Story first published: Thursday, April 14, 2022, 12:38 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.