உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பைசாகித் திருநாளை முன்னிட்டுப் பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.
புதன் இரவில் குடும்பத்துடன் பொற்கோவிலுக்குச் சென்று வழிபட்ட அவர், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
பொற்கோவிலுக்குக் குடும்பத்துடன் வரவேண்டும் என்கிற தனது கனவு நனவானதாகக் குறிப்பிட்டார்.
இதேபோல் அட்டாரி – வாகா எல்லைப் பாதுகாப்புப் படையின் சாவடியையும் அவர் குடும்பத்துடன் சென்று பார்வையிட்டார்.