சென்னை: தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைப்பிடிப்பதையொட்டி சமத்துவ உறுதி மொழியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றாா். முதல்வர் ஸ்டாலின் சமத்துவநாள் உறுதிமொழியை வாசிக்க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஏற்றுக் கொண்டனர். சாதிவேறுபாடு ஏதமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க அனைவரும் பாடுபடுவோம் என முதல்வர் கூறினார்.