டெல்லியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்று புதிதாக 299 பேருக்கு தொற்று உறுதியானது.
முந்தைய நாளை விட நேற்று 50 சதவீதம் புதிய வழக்குகள் பதிவானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பரவல் எண்ணிக்கையை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எக்ஸ்.இ. வகை புதிய மாறுபாடு கண்டறியப்படும் வரை பரவலை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் டெல்லி சுகாதார அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் தெரிவித்தார். மருத்துவமனைகளை கண்காணித்து வருவதாகவும், பரவல் அதிகரித்தாலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.