மைசூரு:”ஏழைகளுக்கான பி.பி.எல்., ரேஷன் கார்டுகளை பணக்காரர்கள் பெற்றிருந்தால், அந்த நபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்,” என, கலால் துறை அமைச்சர் கோபாலய்யா தெரிவித்தார்.
மைசூரில் அவர் கூறியதாவது:வறுமை கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு மட்டுமே, பி.பி.எல்., ரேஷன் கார்டு அளிக்கப்படுகிறது. இதை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.புதிதாக பி.பி.எல்., கார்டு கோரி, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர், மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்களை பரிசீலித்து தகுதியானவர்களுக்கு மட்டுமே இந்த கார்டு வழங்கப்படும்.ஏழைகளுக்காக வழங்கப்படும் பி.பி.எல்., கார்டுகளை பணக்காரர்கள் பெறக் கூடாது.
அரசு ஊழியர்கள் உட்பட பலரிடம் இருந்த அந்த கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இரண்டு, மூன்று மாடிகள் கொண்ட சொந்த வீடு வைத்துள்ளவர்களின் பி.பி.எல்., கார்டும் ரத்தாகும். நாட்டில் 80 கோடி மக்களுக்கு, மத்திய அரசு பி.பி.எல்., கார்டு மூலம் உணவு தானியங்கள் வழங்குகிறது. மத்திய அரசுடன், மாநில அரசும் கை கோர்த்து, ‘அந்த்யோதயா’ கார்டுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement