அரசு ஊழியர்கள் அரை மணி நேரத்திற்கு மேல் உணவு இடைவெளி எடுக்கக் கூடாது என உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
ஏராளமான அரசு ஊழியர்கள் நீண்ட நேரம் உணவு இடைவேளை எடுப்பதால், அரசுப் பணிகள் பாதிக்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவை உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார். குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கு ஊழியர்கள் வருவதையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 255 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியது. இதையடுத்து, யோகி ஆதித்யநாத் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM