ராக்கி நல்லவரா… கெட்டவரா…? கேஜிஎஃப் 2 விமர்சனம்

KGF 2 Review,KGF 2 movie Launched live Updates, Kgf :பிரபல கன்னட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு இந்தியா முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் கேஜிஎஃப். பிரபல கன்னட நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் கோலார் தங்க சுரங்கத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

சிறுவயதில் அம்மாவுக்கு செய்துகொடுத்த சத்தியத்திற்காக வாழ்வில் இறுதி வரை போராடும் ஒரு இளைஞராக யாஷ் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கோலார் தங்க சுரங்கத்தை கைப்பற்றும் நோக்கில், அந்த சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டுகொண்டிருக்கும் கருடன் என்பவனிடம் இருக்கும் அடிமைகளில் ஒருவனாக செல்லும் ராக்கி படத்தின் இறுதியில் கருடனை கொன்றுவிடுகிறான்.

அத்துடன் முதல் பாகம் முடிந்துவிட்ட நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு தற்போது கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் அடிமைகளுக்கு மத்தியில் அழுக்கு உடையுடன் தனது லட்சியத்திற்காக அமைதியாக இருக்கும் ராக்கி ஒரு கட்டத்தில் கருடனையே கொன்றுவிடுவதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அந்த எதிர்பார்ப்புக்கு பதில் சொல்லும் வகையில், கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் முடிவில் இருந்து தொடங்கும் 2-ம் பாகத்தில், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். கருடனை கொன்ற ராக்கி கேஜிஎஃப்பை தனக்கு சொந்தமாக்கிக்கொள்கிறான். அங்கிருக்கும் அடிமைகளுக்கு தேவையாக வசதிகளை செய்துகொடுத்து தனது படை வீரர்களாக வைத்திருக்கிறான்

இதை தாங்கிக்கொள்ள முடியாத, கருடனின் கூட்டாளிகள் மற்றும் ஆதிரா ஆகியோர் பல முனைகளில் இருந்து கேஜிஎஃப்பை பிடிக்க முயற்சி செய்கின்றனர். இதில் இருந்து ராக்கி கேஜிஎஃப்பை காப்பாற்றினாரா இறுதியில் என்ன நடந்தது என்பதே இந்த படத்தின் மீதிக்கதை. முதல் பாகத்தை விட அதிரடி ஆக்ஷன் கட்சிகள் அதிகம் நிறைந்துள்ள கேஜிஎஃப் 2 படத்தில் நாயகன் யாஷ் ஒற்றை ஆளாக படத்தை தன் தோளில் சுமந்துள்ளார்.

கேஜிஎஃப்பில் அடிமைகளாக இருந்த பல்லாயிரக்கணக்காக தொழிலாளர்கள் ராக்கியின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் துணை நிற்கின்றன. படத்தில் யாஷ் வரும் ஒவ்வொரு காட்சிகளும், விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்ததாக உள்ளது. அது சமயம் ஆதிரா என்ற பவர்ஃபுல் கேரக்டரில் நடித்தள்ள சஞ்சய் தத் உடல் முழுவதும் டாட்டூக்கள் மற்றும் சிக்கலான தலைமுடி வித்தியாசமான தோற்றத்தில் நடித்தள்ளார்.

இந்திய பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் வரும் ரவீனா டாண்டன் குறிப்பிட்ட கட்சிகள் மட்டுமே வந்தாலும், தனது பார்வையாளே அனைவரையும் மிரட்டும் தோற்றத்தில் நடித்து்ளளார். படத்தில் இருக்கும் இத்தனை வில்லன்களையும் ராக்கி எப்படி சமாளித்தார் என்று சொல்வதை விட, ஆதிராவை எப்படி சமாளித்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஏன்னென்றால் படத்தில் ஆதிராவை தவிர மற்ற வில்லன்கள் அனைவரும் தங்கள் வில்லன்கள் என்பதை மறந்துவிட்டது போலத்தான் உள்ளது.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொன்று ராக்கியின் தாயாக நடித்துள்ள அர்ச்சனா ஜோயிஸ் நடிப்பு. தனது மகனுக்கு ஊக்க அளிக்க அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இளைஞர்களை எழுச்சியில் பிரமிக்க வைக்கும் அளவில் உள்ளது. ஆனால் ராக்கி என்று வரும்போது, சூழ்நிலையின் காரணமாக கெட்ட காரியங்களைச் செய்யும் நல்லவனா, அல்லது நல்ல இதயம் கொண்ட கெட்டவனா? என்று யோசிக்க தோன்றுகிறது.

அதேபோல் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பெரிய அளவில் வேலை இல்லை. ராக்கியின் காதலியாக வரும் அவர், கடைசி வரை பெரியதாக எதுவும் செய்யவில்லை. அதே  சமயம் அவரை காப்பாற்ற போய் ராக்கி சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்.  தனது ‘அக்னிபத்’ அவதாரத்தில் வரும் சஞ்சய் தத் கூட பெரிதாக எதுவும் செய்ய வில்லை. கேஜிஎஃப் பிடிக்க வேண்டும் என்ற தனது பல ஆண்டு கனவை சித்த ராக்கியை எதிர்த்து வரும் ஆதிரா, வாயைத் திறந்து கர்ஜனை செய்வதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.

ரவீனா டாண்டன் ஒரு சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார். ராக்கியின் வீரச் செயல்களை நமது வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து அழித்துவிடுவதை உறுதி செய்த செயலுக்கும் முன்னோடியாக இருக்கிறார். இந்த படத்தில் பல பெண்கள் இடம்பெற்றிருந்தாலும்  ரவினா டாண்டனை தவிர மற்ற யாருக்கும் நடிப்பதற்கு போதுமான வாய்ப்பு இல்லை.

கேஜிஎஃப் முதல்பாகத்தை போல்இந்தப் படமும் முழுக்க முழுக்க ஆண்களை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராக்கி ஒரு பாண்டியனிடம் பேசும்போது பெண்கள் குறித்து உயர்வாக பேசுவார். மற்றபடி கேஜிஎஃப 2 அதிக சத்தம், அதிக கோபம், சிறிய தாக்கம் அவ்வளவுதான்.  கேஜிஎஃப் முதல் பாகம் பிடித்த நபர்களுக்கு 2-ம் பாகம் பெரிய பூஸ்டாக இருக்கும்.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.