பின்லாந்து வளைகுடாவில் ரஷ்ய கடற்படைகள்: பாதுகாப்பு துணைத்தலைவர் எச்சரிக்கை!


பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைந்தால் பின்லாந்து வளைகுடாவில் ராணுவ படைகள் வரிசைப்படுத்தப்படும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா போர் நடவடிக்கைகளை மேற்கொண்டதை தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் இணையப்போவதாக வெளிப்படையாக தெரிவித்தது.

மேலும் நேட்டோ கூட்டமைப்புடன் இணைவது தொடர்பாக நான்கு வாரங்களுக்கு மேலாக 200 உறுப்பினர்களை கொண்ட பின்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மே மாத இறுதிக்குள் உறுதியான முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பின்லாந்து நாட்டின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அதன் பொருளாதார மற்றும் பாதுகாப்பில் மிக நெருங்கிய நடப்பு நாடான ஸ்வீடனும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவது தொடர்பாக முக்கிய விவாதத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் நேட்டோ அமைப்பில் இணையும் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளின் இந்த முடிவுக்கு ரஷ்யா கடுமையான எச்சரிக்கை விடுத்துவருகிறது.

அந்தவகையில், நேட்டோ அமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் இணைந்தால் அந்த நாடுகளின் எல்லைகளில் படைகள் குவிக்கப்படும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் தெரிவித்துள்ளார்.

மேலும் போலந்தின் வளைகுடா கடற்பகுதிகளில் ரஷ்யாவின் பாதுகாப்பு கடற்படை வரிசைப்படுத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார். 

   

கதிகலங்கிய ரஷ்யா…கருங்கடலை ஆட்சி செய்த மாஸ்க்வா போர்க்கப்பல் மீது தாக்குதல்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.