பிரித்தானிய சாலையில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: குற்றவாளி அதிரடி கைது!


பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியில் உள்ள சாலைகளில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கற்பழித்த நபரை வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பிரித்தானியாவின் முக்கிய தொழில் நகரமான பர்மிங்காமில் உள்ள ஆல்டன் பவுல்வர்டு ஈஸ்ட் மற்றும் டால்பின் லேன் பகுதியில் நேற்றிரவு சாலையில் சென்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை 36 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் பலவந்தமாக கற்பழிக்க முயன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த நபரை பெண்ணை கற்பழிக்க முயன்றது மற்றும் தடைவிதிக்கப்பட்டுள்ள போதைப் பொருளை பயன்படுத்தியது போன்ற குற்றங்களின் கீழ் கைது செய்து அங்குள்ள காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Credit: SnapperSK

இதுகுறித்து வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் பேசுகையில், பர்மிங்காம் நகர சாலையில் பெண்ணை துன்புறுத்தியதற்காக 36 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்து இருப்பதாகவும், அவர் தடை செய்யப்பட்ட போதைப் போதை பொருளை பயன்படுத்தி இருப்பதாக சந்தேகப்படுவதால் அதுகுறித்த விசாரணையையும் நடத்திவருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விரும்பத்தகாத நிகழ்வில் பாதிக்கப்பட்ட பெண்ணை தற்போது  எங்களது சிறப்பு அதிகாரிகள் ஆதரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 101என்ற தொலைப்பேசி எண்ணில் பொலிசாரை உடனடியாக தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொண்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.