நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தந்து, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது குறித்து ஆளுநர் உத்தரவாதம் தரவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்கம்தென்னரசு தெரிவிக்கையில்,
“208 நாட்களாக நீட் விளக்கு மசோதா நிலுவையில் உள்ளது. நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என்று மீண்டும் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.
முதல்வர் ஸ்டாலினிடம் உறுதி அளித்த பிறகு, நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார். நீட் விலக்கு மசோதா எப்போது அனுப்பி வைக்கப்படும் என்ற கால அளவையும் ஆளுநர் சொல்ல மறுக்கிறார்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், வருங்காலங்களில் ஆளுநர் நிகழ்வுகளில் தமிழக அரசு பங்கேற்குமா? என்பதை முதல்வர் முக ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.