அஜித்துக்கும் இதே மாதிரி பண்ணிவிடுங்க விக்கி: உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நானும் ரெளடிதான் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘
காத்துவாக்குல ரெண்டு காதல்
‘ படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும்
விக்னேஷ் சிவன்
இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி,
நயன்தாரா
இருவரும் இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ளதால் ரசிகர்களுக்கு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப்படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளதால் படம் வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

அண்மையில் இந்தப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. கண்மணியாக வரும் நயன்தாரா மற்றும் கதிஜாவாக வரும் சமந்தா இருவரையும் காதலிக்கும் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப்படம் உருவாகியுள்ளது என்பது படத்தின் டீசரிலே தெரிகிறது.

தனுஷை விடாமல் துரத்தும் ஐஸ்வர்யா: இதுக்கு ஒரு எண்டே கிடையாதா..?

இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. சமந்தா, நயன்தாராவுடன் விஜய் சேதுபதி செம்ம ஆட்டம் போடும் இந்த வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை தொடர்ந்து அஜித்தின் ‘
ஏகே 62
’ படத்தை இயக்கவுள்ளார் விக்னேஷ் சிவன்.

லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் கிளிம்ப்ஸ் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இதே போல் உங்கள் ஸ்டைலில் ‘ஏகே 62’ படத்தில் ஜாலியான அஜித்தை காண்பியுங்கள் விக்கி என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கனடாவில் beast யை அலறவிட்ட விஜய் ரசிகர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.