டிவிட்டர் பங்குகள் முழுவதையும் 41 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கிக் கொள்ளத் தயார் என்று டெஸ்டா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அந் நிறுவனத்தின் 9 புள்ளி 2 சதவீதப் பங்குகளை வாங்கியதையடுத்து போர்டு உறுப்பினராக அவருக்கு பதவி வழங்கப்பட இருந்த நிலையில் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். உலகம் முழுவதும் சுதந்திரமான கருத்துரிமையை தாம் மதிப்பதாகவும் சுதந்திரமான கருத்துரிமை தான் ஜனநாயகத்தை செயல்பட வைக்கும் முக்கிய சமூக வடிவமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
டிவிட்டரின் தற்போதைய நிலையில் அதற்கான சாத்தியம் குறைவாக இருப்பதாகவும் அதனால்அதன் நூறு சதவீதப் பங்குகளா வாங்க தாம் முன்வந்திருப்பதாகவும் எலன் மஸ்க் கூறியுள்ளார்.
டிவிட்டரில் எலன் மஸ்க்கின் கோரிக்கை குறித்து டிவிட்டர் பங்குதாரர்கள் இடையே பதற்றம் எழுந்ததாகவும் இது பற்றி நேற்று டிவிட்டர் போர்டு இயக்குனர்கள் குழு ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகவும் டிவிட்டர் நிறுவனம் பதில் அளித்துள்ளது..டிவிட்டர் ஊழியர்களின் நலன் மற்றும் நிறுவனத்தின் நலன் கருதி எலன் மஸ்க்கின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று டிவிட்டர் நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.