பார்த்திபன் நடிப்பில் உருவான இரவின் நிழல் திரைப்படம் புதிய சாதனை படைத்து அசத்தல்…!

பார்த்திபன்
இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகும் ‘
இரவின் நிழல்
‘ திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.பார்த்திபன் தமிழ் சினிமாவில் பல சோதனை படங்களை எடுத்து வெற்றி பெற்று வருகிறார். ‘
ஒத்த செருப்பு
‘ படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்கஇரவில் நிழல் படத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

உலகிலே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான்-லீனியர்திரைப்படம் இரவின் நிழல் தான். இதற்காக இந்தப் படம்
ஆசியா புக் ஆஃப்
ரெக்கார்ட்ஸ் மற்றும்
இந்தியா புக் ஆஃப்
ரெக்கார்டுகளில் நுழைந்து சாதனை படைத்துள்ளது.

சோதனைகளை சாதனைகளாக மாற்றிய தளபதி..! இரண்டே நாட்களில் இத்தனை கோடியா ?

பார்த்திபனின் முந்தைய படமான ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ ரிலீஸான நேரத்தில் ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஒரு படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரம் இடம் பெற்றிருந்ததற்காக அந்தப் படம் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றது.

‘இரவின் நிழல்’ திரைப்படம் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் படம் இடம்பிடித்ததற்கு பார்த்திபன் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.இரவின் நிழழ் திரைப்படத்தில் மூன்று ஆஸ்கார் விருது பெற்றவர்கள் பணியாற்றுகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான்
இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில்
வரலக்ஷ்மி சரத்குமார்
, ஆனந்த கிருஷ்ணன், பிரிஜிடா சாகா ஆகியோர் நடித்துள்ளனர்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.