கைவிட்ட சீனா.. சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தும் இலங்கை.. $4 பில்லியன் கிடைக்குமா?

அத்தியாவசிய பொருட்களுக்கே கூட கஷ்டப்படும் நிலையில் உள்ள இலங்கை, நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் மீண்டும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள கடனை சரியான காலகட்டத்தில் செலுத்த முடியாது என்று அறிவித்துள்ள இலங்கை, தற்போது மேலும் கடன் வாங்க முயற்சித்து வருகின்றது.

ஒரு நாடு வாங்கிய கடனை செலுத்த வேண்டிய நேரத்தில் செலுத்தாமல் தவறினால் அது திவாலான நிலைமை என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இன்போசிஸ் WFH முடிவு: ஐடி ஊழியர்களை அழைக்க 3 கட்ட திட்டம்.. எப்படி இயங்கும்..? யார் முதலில்..?

விண்ணைத் தொடும் விலைவாசி

விண்ணைத் தொடும் விலைவாசி

கடன் நிதி நெருக்கடிக்கு மத்தியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில், விலைவாசியானது விண்ணைத் தொடும் அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. மக்கள் அதிகரித்துள்ள விலைவாசியால் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த கடுமையான நேரத்தில் செய்வதறியாது, அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஒரு பக்கம் ராகெட் வேகத்தில் உயர்ந்து வரும் விலை வாசி, பணவீக்கம், மறுபுறம் கடும் சரிவில் பொருளாதாரம், இதன் காரணமாக அதல பாதாளம் சென்ற கரன்சி என பலவும் மோசமான நிலையில் உள்ளன.

இலங்கையின் தேவை

இலங்கையின் தேவை

இறக்குமதிக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதியினை சார்ந்திருக்கும் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தி செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இது நுகர்வினை குறைத்துள்ளது. தேவையும் கடும் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இலங்கைக்கு 3 பில்லியன் டாலர் முதல் 4 பில்லியன் டாலர் வரையில் தேவையுள்ளது.

IMFயே நம்பியுள்ளது
 

IMFயே நம்பியுள்ளது

இலங்கைக்கு சீனாவும் கடன் கொடுக்க யோசித்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தினைத் தான் முழுமையாக நம்பியுள்ளது. விரைவில் இலங்கை சர்வதேச நாணயத்திடம் அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடத்தவுள்ளது. எனினும் சர்வதேச நாணயமும் சில நிபந்தனை விதித்து தான் கடன் கொடுக்கும் என்ற நிலை உள்ளது. அதேசமயம் இலங்கைக்கு இதனை வாங்குவதை தவிர வேறு வழியும் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.

அஸ்திவாரமே ஆட்டம் காணலாம்

அஸ்திவாரமே ஆட்டம் காணலாம்

ஏற்கனவே செலுத்த வேண்டிய கடனை தள்ளி வைத்துள்ள இலங்கை, கடனை திரும்ப செலுத்தாத போது கடன் தர மதிப்பீடும் குறையலாம். இதனால் புதிய கடன் வாங்கி வாங்குவது பாதிக்கப்படலாம். அப்படி இல்லாவிட்டால் கூடுதல் வட்டிக்கு கடும் வாங்கும் நிலைக்கு தள்ளப்படலாம். மொத்தத்தில் வங்கித் துறைகள் திவால் நிலைக்கு தள்ளப்படலாம். இலங்கையில் அஸ்திவாரமே ஆட்டம் காணலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக இலங்கைக்கு தற்போதைக்கு IMF-னை விட வேறு வாய்ப்பு இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

sri lanka seeking up to $4 billion as international monetary fund talks set to start

sri lanka seeking up to $4 billion as international monetary fund talks set to start/கைவிட்ட சீனா.. சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தும் இலங்கை.. $4 பில்லியன் கிடைக்குமா?

Story first published: Friday, April 15, 2022, 13:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.