“தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்தின் வெற்றியை அடுத்து அப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி தனது அடுத்தப் படமாக “ தி டெல்லி ஃபைல்ஸ்” படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, தர்ஷன் குமார் மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் நடிப்பில் இப்படம் பெற்றது. இது காஷ்மீர் இனப்படுகொலையின் கொடூரமான உண்மையைக் காட்டியதாக ஒரு தரப்பினர் கொண்டாடித் தீர்த்தனர். இது பொய்ப் பிரச்சாரம் என மற்றொரு தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர். தற்போது இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி தனது அடுத்தப்படமான“தி டெல்லி ஃபைல்ஸ்” படத்தை எடுக்க தயாராகிவிட்டார்.
View this post on Instagram
இது தொடர்பான அறிவிப்பை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விவேக். அந்தப் பதிவில் “தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை வெற்றிபெறச் செய்த அனைத்து மக்களுக்கும் நன்றி. கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் மிகவும் நேர்மையுடன் மிகவும் கடினமாக உழைத்தோம். இனப்படுகொலையால் காஷ்மீரி இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம். நான் ஒரு புதிய படத்தில் பணியாற்ற வேண்டிய நேரம் இது. அது “தி டெல்லி ஃபைல்ஸ்”.” என்று பதிவிட்டுள்ளார் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி.