நெல்சனை கண்டமேனிக்கு திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்: இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!

‘மாஸ்டர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தார்
விஜய்
. நெல்சன் இயக்கிய டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே
பீஸ்ட்
படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததால் ரசிகர்கள் மத்தியில் ‘பீஸ்ட்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

சன் பிக்சர்ஸ்
தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக
பூஜா ஹெக்டே
நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை ரிலீஸ் ஆன ‘பீஸ்ட்’ பட வெளியீட்டை கட்அவுட், பாலாபிஷேகம் என திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். இந்தப்படத்தின் வெளியீட்டை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. பலரும் விஜய்யின் ஸ்கீரின் பிரசன்ஸ் மற்றும் அனிருத்தின் இசை மட்டுமே பக்காவாக உள்ளதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஒரேயடியாக தள்ளிப் போன அருண் விஜய்யின் ‘யானை’ படம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

ஆனாலும் படத்திற்காக விஜய் போட்ட உழைப்பை நெல்சன் வீணடித்துள்ளதாக ரசிகர்கள் திட்டி தீர்த்தி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு நெல்சன் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ‘கோலமாவு கோகிலா’ படம் பண்ணும் போது ஒரு பயம் இருந்துச்சு. ஆனா அடுத்தடுத்து படம் பண்றது பெரிய விஷயமா தெரியல என பேசியுள்ளார்.

அவரின் இந்த பேச்சை இணையத்தில் பகிர்ந்து திட்டி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள். விஜய் மாதிரி ஒரு பெரிய நட்சத்திரம் இயக்குனரை நம்பி தன்னையே ஒப்படைச்சும் விஜயகாந்த் காலத்து அரசப்பழசான கதையை படமா கொடுத்துட்டு இப்படி ஒரு திமிர் பேச்சா? உங்க மேல உண்டான மரியாதையே போச்சு நெல்சன் என கண்டமேனிக்கு நெல்சனை விளாசி வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.

பயமா இருக்கா? “பீஸ்ட்” தியேட்டரை அலறவிட்ட ரசிகர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.