4நாட்கள் தொடர் விடுமுறை: கடந்த இரு நாளில் சென்னையிலிருந்து 1.65 லட்சம் பேர் பயணம்

சென்னை: 4நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக  கடந்த இரு நாளில் சென்னையிலிருந்து 1.65 லட்சம் பேர் வெளிஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.

தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளியையொட்டி, சனிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்ததால், அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்து, 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கோட்டை சுற்றுலா செல்பவர்கள் என ஏராளமானோர் வெளி இடங்களை நோக்கி பயணித்துள்ளனர். 4 நாட்கள் விடுமுறையையொட்டி, பயணிகள் வசதிக்காக தமிழகஅரசும் சிறப்பு பேருந்துகளை அறிவித்ததால், ஏராளமானோர் வெளிஇடங்களுக்கு பயணமாகி உள்ளனர்.

கடந்த இரு நாளில் மட்டும், சென்னையில் இருந்து 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் வெளியூர்  பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் சேர்த்து மொத்தம் 3,000 பஸ்கள் இயக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 700க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன.

இந்த நிலையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்பவும் 17ஆம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, ஆரணி, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.