நேற்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் சென்னை கோயம்பேடு பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜகவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் பாஜகவினர்களை கைது செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜக கொடி கீழே விழுந்ததால் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் நான் காலை
(11.30மணி) மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்துவிட்டுத் திரும்பினேன்.அப்போது அங்கே குழுமியிருந்த பாஜகவினர் பாரத்மாதாகி ஜே என கூச்சலிட்டுக்கொண்டே திடீர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். விசிக கொடிகளைப் (1/3)— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 14, 2022
இந்த நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என கூச்சலிட்டு திடீரென வன்முறையில் ஈடுபட்டதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடிகளை பிடுங்கி எறிந்ததாகவும் எனவே வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர்களை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.