மருத்துவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 10 ஆண்டுகளில் சாதனை படைக்கும்- பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் பூஜ் நகரில் கே.கே. படேல் சூப்பர் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரி ஸ்ரீகுச்சி லேவா படேல் சமாஜ் பூஜ் என்பவரால் கட்டப்பட்டுள்ளது.

கே.கே.படேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவை விட்டு விட்டு பூஜ் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்கள் கடின உழைப்பால் இந்த பகுதிக்கு இப்போது புதிய விதியை எழுதி வருகின்றனர். 200 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை மக்களுக்கு மலிவு மற்றும் தரமான மருத்துவ வசதிகளை வழங்கும்.

சிறந்த சுகாதார வசதிகள் நோய்களுக்கான சிகிச்சைக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. அவை சமூக நீதியை மேம்படுத்துகின்றன.

ஆயுஷ்மான் பாரத்யோஜனா மற்றும் ஜன்அவு‌ஷதி யோஜனா மூலம் ஏழை, நடுத்தர குடும்பங்களின் சிகிச்சையில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையால் அடுத்த 10 ஆண்டுகளில் டாக்டர்கள் எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை படைக்கும்.

20 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் வெறும் 9 மருத்துவ கல்லூரிகளே இருந்தது.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் மருத்துவ கல்வியின் சூழல் மிகவும் மேம்பட்டுள்ளது. 6 ஆயிரம் மாணவர்கள் தற்போது மாநிலத்தில் ஒரு எய்ம்ஸ் மற்றும் 3 டஜன் (36) மருத்துவ கல்லூரிகள் உள்ளன. முன்பு குஜராத்தில் 1000 மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர். தற்போது இந்த மருத்துவ கல்லூரிகளில் சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். ராஜ்கோட்டில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் 2021 முதல் 50 மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது.

இவ்வாறு மோடி பேசினார்.

இதையும் படியுங்கள்.. ஜெருசலேமில் அல்- அக்ஸா மசூதியில் பயங்கர மோதல்- பலர் படுகாயம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.