ஒரு ஸ்பூன் வெந்தயம் சூடான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து… சுகர் பேஷன்ட்ஸ் இதை ட்ரை பண்ணுங்க!

சர்க்கரை நோய் வந்துவிட்டது என்று மனம் கசந்துபோகாதீர்கள், ஒரு ஸ்பூன் வெந்தயம் சூடான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடால் நீரிழிவு 2வது வகை நோயைக் கட்டுப்படுத்த உதவும் என கண்டறியப்பட்டுள்ளது. அதனால், சுகர் பேஷன்ட்ஸ் இதை முயற்சி செய்து பாருங்கள்.

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு, வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. சமையலுக்கு பயன்படுத்தப்படும் வெந்தயம் செரிமானத்தை எளிதாக்க உதவும் நார்ச்சத்து கொண்டதாக அறியப்படுகிறது.

பெரும்பாலான இந்திய சமையலறைகளில் பொதுவாகக் காணப்படும் வெந்தயம் அவற்றின் மருத்துவ குணங்களுக்காக அறியப்படுகின்றன. வெந்தய இலைகள் ஒரு சுவையான உணவைத் தயாரிக்கப் பயன்படும் அதே வேளையில், அதனுடைய மஞ்சள் நிற பழுப்பு வெந்தயத்தில் சர்க்கரை நோய், செரிமானக் கோளாறுகள், எலும்புகளை வலுப்படுத்துதல் போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் பண்புகள் நிறைந்துள்ளன.

சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தின் மூலம் சிறந்த பலன்களைப் பெற, வெந்தயத்தை எந்த நேரத்தில் எப்படி சாப்பிட வெண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை காலையில் முதலில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும் என்று சில ரிபோர்ட்கள் கூறுகின்றன. வெந்தயம் சாப்பிடும்போது அதன் சுவை கடினமாக இருந்தால், காய் கறிகள், பருப்பு அல்லது பிற உணவு தயாரிப்புகளில் சேர்த்தும்கூட சாப்பிடலாம்.

வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கான சர்வதேச இதழில் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தினமும் 10 கிராம் வெந்தயத்தை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால், 2வது வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் திறன் வெந்தயத் தண்ணீருக்கு இருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெந்தயத்தை உட்கொள்ள சிறந்த வழி என்ன?

ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து சுமார் 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர், சுவைக்காக எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை தேன் சேர்த்து வடிகட்டி சூடாக தேநீரைப்போல அருந்தலாம்.

ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் ரிங்கி குமாரி கருத்துப்படி, வெந்தயத்தில் சில நன்மைகள் உள்ளன.

  • வெந்தயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து அல்லது பொதுவாக வெந்தயத் தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது, இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
  • அதுமட்டுமல்லாமல், பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்கவும், அமில வீச்சு அல்லது நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றைச் சமாளிக்கவும் உதவுகிறது.
  • வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிடுவது நம் உடலில் உள்ள நச்சுக்களை அழித்து, சுருக்கங்களையும் கரும்புள்ளிகளையும் தடுக்கும்.
  • வெந்தயம் பிரசவம் மற்றும் கருப்பை சுருக்கத்தை தூண்டுகிறது.
  • வெந்தயம் சில சமயங்களில் பூல்டிஸாகப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, இது துணியில் சுற்றப்பட்டு, சூடுபடுத்தப்பட்டு, தோலில் நேரடியாகப் பயன்படுத்தப்படும். உடல் வலி, வீக்கம், தசை வலி, கணுக்கால் வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.