CSK Bowler Deepak Chahar Leave In Tata IPL 2022 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக தீபக் சஹார் காயம் காரணமாக நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் ஆதிகம் செலுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 முறை சாம்பியன் பட்த்தையும், கடந்த 2020-ம் ஆண்டு சீசனை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேறி எதிரணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அணிகளில் ஒன்றாக உள்ளது. இதில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு முக்கிய பங்காற்றியவர் தீபக் சஹார்.
பவர்ப்ளே ஓவர்களில் அருமையாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் வல்லரான சஹார், கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வந்த அவரை, ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி கடும் போட்டிக்கு இடையே 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
தீபக் சஹார் விரைவில் காயத்தில் இருந்து மீண்டு வருவார் என்று அணி நிர்வாகத்துடன் சென்னை அணி ரசிகர்களும் காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அவரது காயம் குணமடையாததால், ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கியுள்ள சென்னை அணி முதல் 4 போட்டிகளிலும் தொடர் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து கடந்த போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனாலும் சென்னை அணியின் பந்துவீச்சு மெச்சும்படி இல்லை. இந்த நேரத்தில், தீபக் சஹர், தொடரில் இருந்து விலகியுள்ளது. அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை அணியின் புதிய கேப்டன் ஜடோ இதை எப்படி கையாள போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த தீபக் சஹார், , 8.35 என்ற ரன்ரேட்டில், 15 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிலும் குறிப்பாக பந்துவீச்சின் போது பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிகளை திணறடித்து வந்த சஹார், விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக மாற்று வீரர் தேர்வு செய்யப்படுவாரா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“ “